கேளிக்கை வரிவிலக்கு பெற லஞ்சம் ; மன்சூர் அலிகான் பகிரங்க குற்றச்சாட்டு..!


நடிகர் மன்சூர் அலிகானை பற்றித்தான் தெரியுமே.. பொதுமேடை என்றுகூட பாராமல் பல உண்மைகளை தடால் என போட்டு உடைத்துவிடுவார். அப்படித்தான் ‘உறுதிகொள்’ என்கிற பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் கேளிக்கை வரி விளக்கு அளிப்பதற்காக லஞ்சம் பெறப்படுகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

“அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 50 லட்சம், சிங்கம்-3 படத்துக்கு 60 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தான் கேளிக்கை வரி விலக்கு அளித்தார் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்” என்று புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டை அடுக்கினார் மன்சூர் அலிகான். இதனால் விழா பரபரப்பானது.

Leave a Response