சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக மதன் கார்க்கி அறிவிப்பு..!


இன்றைய சூழலில் ஜி.எஸ்.டி.வரி என்பதே திரையுலகினருக்கு பெரும் சுமையாக இருக்கையில், தமிழக அரசு வேறு தேவையில்லாமல் 30 சதவீதம் நகராட்சி வரி என வசூளிக்கப்போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகமே அரண்டு போயுள்ளது.. தியேட்டர்காரர்கள் கட்டணங்களை கூட்டினால் கட்டுபடி ஆகாது என காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டனர்.

இன்னொரு பக்கம் நடிகர்கள் உட்பட முன்னணி டெக்னீசியன்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதற்கு முன்னுதாரணம் காட்டுவதுபோல பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது ஊதியத்தில் 15 சதவீதம் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

Leave a Response