காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் மூழ்கிவிட்டார் இயக்குனர் மணிரத்னம்.. இந்தப்படத்தின் கதாநாயகன் யாரென தெரியாத நிலையில், படத்தின் கதாநாயகிகள் மட்டும் யாரென தெரியவந்துள்ளது. ஒருவர் ஜோதிகா. இன்னொருவர் ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ்..
இயக்குனர் மணிரத்னம் படங்களில் கதாநாயகியாக நடிக்கவேண்டுமென்றால் அவர் முன்னணி கதாநாயகியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை..நடிக்க தெரிந்த நடிகையாக இருந்தால் அவருக்கு நிச்சயம் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை..