தியேட்டர்கள் ஸ்ட்ரைக் ; விஜய் விரக்தி.. கண்ணன் கதறல்..!


ஜி.எஸ்.டி வரியைக்கூட சமாளித்துக்கொள்வோம்.. ஆனால் தமிழக அரசின் இன்னும் 30 சதவீத நகராட்சி வரியை சுமக்க எங்களால் முடியாது என கூறிய தியேட்டர் அதிபர்கள் தடால் என காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துவிட்டனர். இதனால் தமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்களுக்கு மேல் மூடப்பட்டு விட்டன.

இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான வனமகன், இந்த வாரம் வெளியான இவன் தந்திரன் ஆகிய படங்கள் இந்த திடீர் முடிவால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக இவன் தந்திரன் படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தும், இந்த ஸ்ட்ரைக்கால் ஒரு தயாரிப்பாளராக தனக்கு மிகப்பெரிய பாதிப்பு என படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் ஒரு ஆட்யோவில் அழுது புலம்பி இருந்தார்.

அதேபோல வனமகன் பட இயக்குனர் விஜய், தனது படத்தை கடந்த மேமாதமே வெளியிட வேண்டியவர், விஷாலின் போராட்ட அறிவிப்பு காரணமாக இந்த ஜூன்-23க்கு மாற்றிவைத்தார். படம் வெளியாகி பத்துநாட்களுக்குள் இப்படி திடீரென ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்ட காசை எப்படி எடுப்பது என பரிதவித்து வருகிறார். மேலும் போராட்டத்தை கைவிடுமாறு தியேட்டர் அதிபர்களுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.

Leave a Response