
மாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் தான் ‘விக்ரம் வேதா’.. இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரித்துள்ளார். இந்தப்படம் வரும் வாரம் ரிலீஸாக இருக்கும் நிலையில் படத்திற்கு ‘எ’ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு.. அதிகப்படியான வன்முறை, ரத்தம் ஆகியவை இடம்பெற்றிருப்பது தான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது..
ஆனால் படக்குழுவினரோ ‘ஏ’ சான்றிதழை பெற தயாராக இல்லை.. ஆகவே இந்தப்படத்தை மறு சீராய்வு கமிட்டிக்கு அனுப்பி ‘யு/ஏ’ சான்றிதழை பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சான்றிதழ் கிடைத்தால் தான் பெண்கள் மற்றும் வயதுவந்த குழந்தைகளை தியேட்டருக்கு வரவைக்க முடியும் மற்றும் டிவி சாட்டிலைட் விஷயங்கள் எளிதாகும் என்பதால் கடும் முயற்சி எடுத்து வருகின்றனராம்.


