விக்னேசுவரனுக்கு எதிராக சிங்களர் சதி- அம்பலப்படுத்தும் குணாகவியழகன்


விக்னேசுவரன் தலைமையிலான வடமாகாண அரசு, சிங்களர்களுக்குத் தலைவலியாக இருக்கிறது. இதனால் அந்த அரசை அகற்றவேண்டும் என்று சிங்கள மற்றும் சிங்கள ஆதரவு தமிழர்கள்
முயல்வதை வெளிப்படுத்தும் எழுத்தாளர் குணாகவியழகனின் பதிவு….

வடக்கு மாகாணசபை ஆபத்தில் இருக்கிறது. சதி ஒன்றின் மூலம் அது கலைக்கப் படவும்கூடும் .!
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை பின்வாங்க வேண்டிய அவமானம் நிகழ்ந்த பின், முடிந்தால் மாகாணசபையை கலைத்து புதிய தேர்தலை முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்கொண்டு தன் மக்கள் ஆதரவை நிருபிக்கட்டும் என சுமந்திரன் சவால் விடுத்திருந்தார். தமிழரசுக்கட்சி கூட்டம் என அழைத்து முதலமைச்சரை சூழலால் கைது செய்து புதிய அமைச்சர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றினார்கள். இந்த அரசியல்களின் பின்னால் என்ன தான் நடக்கிறது ?

முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை கட்சிநிருத்தும் போதே அமைச்சர்களுக்கான நியமன அதிகாரமும் சேர்த்தே வழங்கப்பட்டுவிட்டது. அந்த அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களிக்கின்றனர். மக்களின் கொடுத்த அதிகாரத்தை யாருக்காக கலைக்க சொல்கின்றார் சுமந்திரன். இது கட்சியின் தீர்மானமா? அப்படி இல்லை என்றால் சம்பந்தன் எதற்கு மௌனமாக இருக்கிறார். மக்கள் ஆணைக்கு எதிராக இவர்கள் தீர்மானம் எடுத்தால் அது சனநாயக விரோதம் இல்லையா. இந்த அரசியல் அயோக்கியத்தனம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது ?
ஒரு ஆதிக்க நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கருவியாக இவர்கள் செயற்படுகிறார்கள் என்பதையே இவை காடுகின்றன. வரும் நாட்களில் இது இன்னும் தெளிவாக வெளிப்படபோகிறது

இதோ சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் அளித்துள்ள நேர்காணலில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். விக்கினேஸ்ரனின் நிலைப்பாடு நாட்டு நலனுக்கு எதிரானதும், இன ஐக்கியத்திற்கு முரணாணதுமாகும் எனவே அவரைப் பதவிவிலக்க வேண்டிய கால கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். வேட்பாளரை நிறுத்திய கட்சியே அவரை நீக்க முனைகிறது மட்டுமல்லாமல் மத்திய அரசின் உதவியாய் மறைமுகமாக வேண்டி நிற்கிறது.அல்லது தூண்டுகிறது. மத்திய அரசாங்கம் மாநில அரசை கலைக்கும் அதிகாரத்தை சனநாயக விரோதம் என்று எதிர்த்து அந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டியவர்கள் கலைக்கும் அதிகாரத்தை அல்லது அனுமதியை வலிந்து கொடுப்பதன் அரசியல் அயோக்கி யதனமன்றி வேறென்ன.

காரணம் ஒன்றுதான் புதிய அரசியல் யாப்பு தமிழரின் உரிமைகளை பலியிடபோகிறது. மட்டுமல்ல சிறுபான்மை அனைவரின் உரிமைகளும் பலியிடபடலாம். இடது சாரிகளும் பலவீனப்படுத்த படக்கூடிய தேர்தல் முறையே அறிமுகமாகும்.
புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதாயின் பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும் நீதிமன்ற அனுமதியும். சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் ஆணையும் மட்டுமல்ல மாகாண சபைகளின் அனுமதியும் வேண்டும். மாகாண சபைகளின் அனுமதியின்றி அரசியல் யாப்பு மாற்ற முடியாதது என்பது பதின் மூன்றாவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுவிட்டது.

இப்போது அரசியல் யாப்பை மாற்ற கூடிய அனைத்து வாய்ப்பையும் இந்த அரசு கொண்டிருக்கிறது மாகாண சபைகளின் அனுமதி என்பதை தவிர. அதுவும் வடக்கு மாகாண சபை என்பதை தவிர.

ஆக வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரனை அகற்ற முயற்சிப்பார்கள் அதுவும் முடியாதுபோனால் உள்ளே குழப்பத்தை கொண்டுவந்து மாகாண சபையை கலைத்து ஆளுநரின் கீழும் கொண்டுவர வாய்ப்புள்ளது. இந்த சதி பற்றிய அறிவை மக்களிடம் கொண்டுபோவதே இப்போது முதல் கட்ட பாதுகாப்பு.
முதல்வர் விக்னேஸ்வரனும் சபையும் இது பற்றிய அரசியல் விழிப்புடன் இருக்கவும் வேண்டும்.

Leave a Response