மெர்சல் பட முதல்பார்வையில் இளைய தளபதி விஜய், தளபதி விஜய் ஆனார்

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது படமாக விஜய் 61 படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அந்தப் படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் படத்தின் முதல்பார்வையையும் படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் விஜய்க்கு இரட்டைவேடங்கள். முறுக்கு மீசை, தாடி கெட்டப்பில் ஒரு விஜய். அவருக்கு ஜோடி நித்யாமேனன். இன்னொரு விஜய், க்ளீன் ஷேவ் கெட்டப்.

அவருக்கு ஜோடி, காஜல் அகர்வால். சமந்தாவிற்கு அழுத்தமான வேடம். விஜய்யின் படங்களிலேயே மிகப்பெரிய செலவு, பெரிய நடிகர்கள் அதிகம் நடிக்கும் படம் என்ற சிறப்பு இந்தப் படத்திற்கு உண்டு. 3 நாயகிகள் தவிர, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா என நடிகர்களின் பட்டியல் நீள்கிறது. பாகுபலி கதாசிரியரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். தீபாவளி தினத்தன்று இந்தப்படம் வெளியாகவிருக்கிறது.

இதுவரை இளையதளபதி என்றுதான் விஜய்யை அழைப்பார்கள், இந்தப்படத்தில் தளபதி விஜய் என்று போட்டிருக்கிறார்கள். இந்தப் பதவி உயர்வு அவருடைய அரசியல் நுழைவுக்கான முன்னோட்டமா? என்கிற பேச்சு வரத்தொடங்கிவிட்டது.

Leave a Response