விஜய் பட டைட்டிலுக்கு இப்படியும் ஒரு உள் அர்த்தம் இருக்கிறதா..?


அட்லீ இயக்கி வரும் விஜய்யின் புதிய படத்திற்கு ‘மெர்சல்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வட சென்னை வாசிகள் இந்த மெர்சல் வார்த்தையை அதிகம் பயன்படுத்துண்டு. விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தில் இடம் பெற்ற நான் மெர்சலாயிட்டேன் என்ற பாடலுக்கு பிறகு இந்த வார்த்தை பிரபலமானது.

இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் 3 வேடங்களில் அசத்தும் வகையில் அமைந்துள்ளதாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை அசர வைக்கும் என்பதாலும் இதற்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் மெர்சல் டைட்டில் டிசைன் காலை மட்டை நினைவூட்டுவதைப்போல இருக்கிறது. இதனால் மெரீனா என்கிற ஆங்கில வார்த்தையில் இருந்து மெர்’ என்பதையும் வாடிவாசல் என்பதில் இருந்து ‘சல்’ என்கிற வாரத்தையையும் எடுத்து ‘மெர்சல்’ என உருவாக்கியுள்ளதாகவும் ஒரு புதிய கதை ஒன்று உலாவந்துகொண்டு இருக்கிறது.

Leave a Response