தமிழில் மீண்டும் முழு மூச்சாக களமிறங்கிய பிரபுதேவா..!


கொஞ்ச காலம் பாலிவுட்டிலேயே தனது குடியிருப்பை மாற்றியிருந்தார் பிரபுதேவா.. ஆனால் தற்போது ‘தேவி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் பிரபுதேவா, ‘குலேபகாவலி’, ‘யங் மங் சங்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ திரைப்படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்ல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Response