பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் படத்தை ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அதே விறுவிறுப்பில் இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘அறம்‘ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிர்வாகம்.
ஏற்கனவே சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, விஷாலின் இரும்பு திரை மற்றும் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மம்முட்டியின் ‘பேரன்பு’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் ‘குலேபகாவலி’யும் போட்டியை சந்திக்க களத்தில் குதிக்க இருக்கிறது.