‘சைத்தான்’ டீசரில் கபாலி-படையப்பா’ ஸ்டைலில் விஜய் ஆண்டனி..!


தனது வெற்றி பயணத்தை செம்மையாக தொடர்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, விரைவில் வெளியாக இருக்கும் தனது ‘சைத்தான்’ திரைப்படத்தின் டீசரை யூடூப்பில் இன்று வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலேயே ‘சைத்தான்’ டீசரானாது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது.

இந்த டீசரின் ஆரம்பத்தில் ‘கபாலி ஸ்டைலில் விஜய் ஆண்டனியின் கால்கள் மட்டும் நடந்து வருவது தெரிவதும், படையப்பா ஸ்டைலில் ஷூ நம் முகத்து நேரே தெரியும்படி காலை தூக்கி இன்னொரு கால் மேல் போடுவதுமாக ரஜினி ஸ்டைலை பாலோ பண்ணியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து இருக்கும் ‘சைத்தான்’ படத்தை இயக்கி இருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சஸ்பென்ஸ், அதிரடி, திரில்லர் என வலுவான கலவையில் உருவாகி இருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம் தீபாவளி திருநாளன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வர இருக்கிறது. ‘ஆரா சினிமாஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response