
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தமிழ்நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர். தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். கதாநாயகியாக நடிக்கும் ராகுல் பரீத் சிங் ஏற்கனவே ‘எண்ணமோ ஏதோ’ படம் மூலம் நமக்கு அறிமுகமானவர்தான். இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படமானது, ‘பாகுபலி’யை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் வியாபார எல்லையை இன்னும் விரிவுபடுத்தும் என்றே தெரிகிறது.
கடந்த மாதம் ஹைதராபாத்தில் வெற்றிகரமாக தொடங்கிய இந்தப்படத்தின் சில காட்சிகளை ஹைதராபாத் நகரில் படமாக்கிவிட்டு முக்கிய காட்சிகளை படமாக்க சென்னைக்கு வந்துள்ளனர் முருகதாஸும் மகேஷ்பாபுவும். இந்த திரைப்படத்திற்காக சென்னைக்கு அருகே ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை அமைத்து, அதில் இருபது நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மகேஷ் பாபு, முருகதாஸ் ஆகியோருடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.


