சித்த மருத்துவத்தின் மரபை மக்கள் மீட்டெடுக்கத் தொடங்கிவிட்டனர் – ஒரு மருத்துவரின் மகிழ்ச்சி


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நல்வழிக் குழுமத்தின் சார்பில் மிகப்பெரிய அளவில் ‘சித்த மருத்துவ விழா’ செப்டம்பர் 18 அன்று நடைபெற்றது.

இவ்விழா பற்றி அவ்விழாவில் பங்கேற்ற மருத்துவர் விகரம்குமார் எழுதிய குறிப்பில்,

அக்கால காவிரி பிரவாகத்தைக் காண குவிந்த மக்களைப் போல இந்த விழாவிற்கு வெகுஜன கூட்டம். ஏறக்குறைய மூவாயிரம் பொது மக்கள் சித்த மருத்துவத்திற்காக ஒரே இடத்தில் ஒன்று கூடியது அற்புதமான நிகழ்வு.

உணர்வுகளை தட்டி எழுப்பிய மரபிசை விழாவின் தொடக்கம். மூலிகை கண்காட்சி, இயற்கை உணவு, புத்தகம் மற்றும் மருந்துகளின் கண்காட்சி, கருத்தரங்கம் என விழா களைகட்டியது. உடல் நலம் குறித்து சித்த மருத்துவர்.மைக்கேல் ஜெயராஜ் அவர்களும், உள்ள நலம் குறித்து எழுத்தாளர்.வெங்கடேசன் அவர்களும், சமூக நலம் குறித்து சித்த மருத்துவர்.சிவராமன் அவர்களும் சிறப்புரை வழங்கியது விழாவின் சிறப்பு.

மூன்று மணி நேரம் தங்களின் உரை மூலம், ஒரே இடத்தில் பொதுமக்களை அமரச்செய்த பெருமை இவர்களையே சேரும்.

நல்வழிக் குழுமத்தின் விடா முயற்சியால் உருவாகிய வெற்றி விழா! மரபு மிக்க சித்த மருத்துவத்தின் மரபை, மக்கள் மீட்டெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு இந்த விழாவே சாட்சி! விழாவிற்காகக் கடுமையாக உழைத்த திரு.கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response