
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ படம் சூப்பர் என்றும் சரியில்லை என்றும் பரவாயில்லை என்றும் பலவிதமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.. ஆனால் உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்ததா கபாலி..? என்றால் நிச்சயமாக இல்லை..
லிங்கா’ படம் வரைக்கும் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இவரு ‘ஓப்பனிங் பில்டப் ஸாங்’, ‘ஹீரோயினை கட்டிப் பிடிக்கிறது’, ‘மரத்தை சுத்தி டூயட் பாடுறது’ன்னு பண்ணிக்கிட்டு இருப்பாரு என கேட்டவர்களின் வாயை பிளாஸ்திரி வைத்து ஒட்டியிருக்கிறார் ரஜினி..
நிச்சயமாக இது ரஜினியின் புதிய பரிமாணம். வழக்கமான கமர்ஷியல் ரஜினியை மட்டுமே எதிர்பார்த்து சென்ற ரசிகர்கள் சிலருக்கு வேண்டுமானால் ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் ரஜினியின் இந்து புது அவதாரம் ரசிகர்களுக்கு நிச்சயம் ‘மகிழ்ச்சி’ தான்.


