
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இன்று (அக்டோபர் 20,2026) கோவையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.கைது செய்யப்பட்டவர்களை தாராபுரம் அழைத்துச் சென்றனர்.
தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய்,அக்டோபர் 4 ஆம் தேதி வாகன பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வீராச்சிமங்கலம் என்ற
பகுதியில் முதல்வர் செல்வதற்கு சற்றுநேரத்துக்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா
தொண்டர்களுடன் வாகன பேரணியாக வந்தார்.
முதல்வர் வருகைக்காக அங்கு நின்றிருந்த காவல்துறையினர் அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு
உத்தரவிட்டனர்.
அனுமதி வாங்கி நடத்தப்படும் பரப்புரையைத் த்டை செய்வதா? என நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் முதல்வரின் வாகனம் அவ்வழியாக வரத்தொடங்கியது. இந்நிலையில்,இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், தேர்தல் பரப்புரையின் போது பதாகை அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர்.இது தொடர்பாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் அரசுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாவது, தேர்தல் நேரத்தில் போட்ட வழக்கிற்கு இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொய்யான வழக்கில் அதிகாலை வீடு புகுந்து கைது செய்து எப்படியாவது நாம் தமிழர் கட்சியை ஒடுக்க வேண்டுமென காவல்துறையை ஏவி விடும் தமிழக முதல்வருக்குக் கடும் கண்டனங்கள்.
இரு பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள் நுழைந்து அதிகாலை பெற்றோர்களைக் கைது செய்வதெல்லாம் பாசிசத்தின் உச்சம்.
என்று தெரிவித்துள்ளார்.


