
பிவிபி சினிமாஸின் பிரமாண்ட தயாரிப்பில் புதியவர் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா, லட்சுமி ராய், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, எம் எஸ்.பாஸ்கர், சரண்யா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து தமிழில் வெளி வந்திருக்கும் படமே ‘பெங்களூர் நாட்கள்.’ பெங்களூர்டேஸ் எனும் மலையாள வெற்றிப் படத்தின் தமிழ் ரீ-மேக்!
ஆர்யா, பாபி, ஸ்ரீதிவ்யா மூவரும் அத்தை – மாமா- சித்தப்பா, பெரியப்பா பசங்கள். சிறு வயது முதல் உறவும் நட்புமாக வளர்ந்த மூவரும் வெவ்வேறு விஷயங்களுக்காக பெங்களூரில் வந்து வசிக்கின்றனர். அங்கு மூவரது வாழ்க்கையிலும், முக்கிய திருப்பங்கள் ஏற்படுகிறது. அது என்ன? அதனால் அவர்கள் அனுபவவிக்கும் இன்ப, துன்பங்கள். என்ன? என்ன? என்பது தான் ‘பெங்களூர் நாட்கள் ‘படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் மொத்தமும்!
பைக் ரேஸரும், டூவீலர், கார் ரேஸருமான ஆர்யா, முன்னாள் பைக் ரேஸரும், பைக் ஆக்ஸிடெண்டில் காதலி சமந்தாவை பறிகொடுத்த வருமான சிவா எனும் அமெரிக்கா ரிட்டர்ன் பிரசாத்தாக ராணா, இன்ன சென்ட் குட்டியாக பாபி சிம்ஹா, அம்மு – ஸ்ரீதிவ்யா, ஆர்.ஜே.சாராவாக பார்வதி, ஏர் ஹோஸ்ட்டஸ் லட்சுமி ராய், கெஸ்ட் ரோல் சமந்தா உள்ளிட்ட எல்லோரும் பெங்களூர் நாட்கள் பாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திரங்கள். அதிலும் பைக் ரேஸில் அசத்தும் ஆர்யா அசத்தல்யா.
பெண்ணை இழந்து தவிக்கும் அப்பாவாக பிரகாஷ்ராஜ், கோவாவுக்கு ஒடிப்போகும் எம்.எஸ்.பாஸ்கர், பாபியின் நாகரீக அம்மா சரண்யா, பார்வதியின் அம்மா ரேகா, ஸ்ரீ திவ்யாவின் பெற்றோர் ராஜா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பிற நட்சத்திரங்கள் எல்லோரும் கூட நாயகர்கள், நாயகியரைப் போலவே பெங்களூர் நாட்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்!
‘”எனக்கு உன் பின்னாடி வர்றதுல்ல. உன் கூடவே வரணும்னு ஆசை.” எனும் ஆர்யா பேசும் வசனமா கட்டும், “எனக்காக இதெல்லாம் செய்யச் சொல்லி நான் யார் கிட்டேயும் எதையும் கேட்பதில்லை. என் வேலைகளை நானே பார்த்துக்குவேன்” என ராணா பேசுவதாகட்டும் ”உனக்கெல்லாம் ஒன்வேல பைக் ஓட்டத்தான் தெரியும். எனக்கு ரன்வேல போற பிளைட்ல பறக்கும் பெண்ணை பிக்-அப் பண்ணத் தெரியுமுன்னு இருத்தேன். என்னும் பாபி சிம்ஹாவின் வசனமாகட்டும், ”அந்தடுப்பு இல்லைடா. நான் கேட்டது இன்டெக்ஷன் அடுப்பு என அம்மா சரண்யா சொல்லும் இடமாகட்டும்.
”கண்ணா, கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் இடையில மாட்டிக்கிட்டு வாழுற வாழ்கைய மறந்துடுறோம்! ‘எனும் எம்.எஸ்.பாஸ்கரின் கடிதமாகட்டும், “இதுதான் இந்த ஊரு….காலச்சாரத்தை தேடி வந்த பொண்ணு. ஒரு பக்கம், மற்றொரு பக்கம் நாகரீகத்தை தேடிப் போற எங்கம்மா” உள்ளிட்ட வசனங்களும் அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் கூட பளிச், பக்கா.
கோபி சுந்தரின் பின்னணி இசை இனிமை. கே.வி.குகன் ஒளிப்பதிவில் பெங்களுரும், பெங்களுர் நாட்கள் படமும் அழகு!
ஆகவே, கொஞ்சம் நீளம் உள்ளிட்ட குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் பெங்களூர் நாட்கள் – தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் நாட்கள் எனலாம்!


