
நடிகர் அஜித்குமார், தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் (ஆகஸ்ட் -3) 25 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.
1992-ஆம் ஆண்டு `பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.அதைத் தொடர்ந்து 1993-ல் `அமராவதி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் பல வெற்றிகளை மட்டுமின்றி மோசமான தோல்விகளையும் அஜித் சந்தித்துள்ளார். தோல்விகள் வந்த போது சோர்ந்து விடாமல், வெற்றிகள் வந்த போது அதைப் பெரிதாக எண்ணாமல் எளிமையாகக் கடந்து சென்றுள்ளார்.
அஜித்தின் 25 வருட திரைப்பயணத்தை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் மற்றும் அவருக்கு சிலை வைக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அஜித்தின் 25 வருட திரைப்பயணத்திற்காக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ஜிகே சினிமாஸில் அமர்க்களம் படத்தை திரையிட்டுள்ளனர். இந்தப்படத்தில் நடித்தபோது தான் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அஜித்தின் 25 வருட பயணத்தில் இதுவரை 57 படங்கள் நடித்துள்ளார். தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம். இந்த படத்தில் அஜித்துடன், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள `விவேகம்’ ஆகஸ்ட் 24-ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசாகிறது.
நான் ஒரு சூப்பர்ஸ்டார் என்பது எனக்குத் தெரியும் அதை மக்களையும் நம்பவைப்பென் என்று பல ஆண்டுகளுக்கு முன்ப சொல்லிய அவர் சொல்லியபடியே செய்தும் காட்டியுள்ளார்.


