தமிழீழ விடுதலையை மதம் சார்ந்து அணுகாதீர்கள் – பாவலர் அறிவுமதி

ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 31.07.17 அன்று சென்னை,சந்திரசேகர்திருமணமண்டபத்தில்உணர்வுப்பெருக்கோடு நடந்தது.

நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய கவிஞர் அறிவுமதி அவர்கள்,

“மக்கள் எல்லாம்தெளிவாக இருக்கிறார்கள்,தலைவர்களே! நீங்கள் தான் எங்களைக்குழப்புகிறீர்கள். ‘சிறைச்சாலை’ எனும் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை அண்ணன்கலைப்புலி தாணு வழங்கினார்.அது இந்தி,தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது.

படத்தில் ஒரு காட்சியில்” நாம்இந்துக்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருப்போம்” என வசனம் வரும்.நான் அதனை “எல்லோரும் உண்ணாவிரதம் இருப்போம்”என மாற்றி எழுதினேன்.

அந்தப் படத்தின்இயக்குனருடைய நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது.

தமிழீழ விடுதலை என்பது தமிழர்களாக உள்ள எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்குமானது.அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானது
என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் பெரியாரின் பிள்ளை,பிரபாகரனின் தம்பி. தமிழ்ஈழவிடுதலையை ஒரு மதத்துக்கானதாகச்
சொல்லி தலைவர் பிரபாகரனை கொச்சைப் படுத்த விடமாட்டேன். நாங்கள்விடமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response