
‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியது மிக பெரிய செய்தியாக பேசப்படுகிறது. ஆனால் இது ஒன்றும் அவருக்கு புதிதல்லவே.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் துவங்கிய நேரத்தில், சொல்லாமல் கொள்ளாமல் அதிலிருந்து விலகி, அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்கு தாவியவர் தான் இந்த ஸ்ருதிஹாசன்.
பிவிபி என்கிற பெரிய நிறுவனத்தின் படம் தான் என்றாலும். கமல் மகள் என்பதால் பிரச்சனை பெரிதாகாமல் பேசி தீர்க்கப்பட்டது. இப்போது ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்தும் இதேபோல ஸ்ருதிஹாசன் விலகியது பற்றி தேனாண்டாள் பிலிம்ஸ் தரப்பில் இருந்து என்ன சொல்கிறார்கள்..?
“ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகியது உண்மைதான். பெரிய பட்ஜெட் படங்களில் இந்த மாதிரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமானவைதான். இதனால், படத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டு வருகின்றன. மேலும் இது தொடர்பாக கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை” என்கிறார்கள்.


