அஜித் படத்தின் டைட்டிலுக்கு காரணம் யார் தெரியுமா..?


சிறுத்தை சிவா இயக்கத்தில் தடர்ந்து நடித்து வருகிறார் அஜீத்.. ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ள சிவா இப்போது மூன்றாவதாகவும் அவரை வைத்து படம் இயக்கி வருகிறார். முதல் இரண்டு படங்களுக்கு வீரம், வேதாளம் என ஆங்கில் ‘வி’ எழுத்தில் தொடங்குவதுபோல டைட்டில் வைத்தார் அல்லவா..? அதனாலேயே இந்தமுறையும் ‘வி’யில் தொடங்கும் ‘விவேகம்’ என்கிற வார்த்தையை டைட்டிலாக்கி இருக்கிறார் சிவா…

அனால் இந்த விவேகம் டைட்டில் வைக்கப்பட்டதற்கு காரணமே இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான். இந்தப்படத்தின் கதையை விவேக் ஒபராயிடம் சொல்வதற்காக சென்ற சிவா, விவேக் ஓபராயிடம், இந்தப்படத்தின் டைட்டிலிலேயே உங்க பெயர் வரும்படிதான் வைத்துள்ளேன்.. காரணம் நீங்கள் தான் இதில் நடிக்கவேண்டும் என்பதால் தான் என கூறினாராம். இப்போது புரிகிறதா டைட்டில் காரணகர்த்தா யாரென்று..?

Leave a Response