விவேகம் -விமர்சனம்


விவேகம்
அஜீத் படம்ன்னு சொல்றத விட டைரக்டர் சிவா படம்ன்னு சொல்றது மட்டும்தான் பொருத்தமா இருக்கும். வீரம் வேதாளம் படங்கள்ள அஜீத்த மாஸா காண்பிக்க முயற்சித்து ஓரளவுக்கு மாஸா காண்பிச்சிருந்தாலும் மசாலா வாடை தூக்கலோ தூக்கலா இருந்தது அந்த கல் எனக்கு சுத்தமா பிடிக்கல. ஆனா நிறைய அஜீத் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தது. ஏதோ சில காரணங்களால அஜீத்துக்கே அது பிடிச்சிருக்கு அதான் தொடர்ந்து மூணாவது படமா விவேகம் வரை வந்து நிக்குது ( அது இங்கயே நின்னுருச்சுன்னா ஒரு அஜீத் ரசிகனா நான் சந்தோசப் படுவேன்)

சிவாகிட்ட எவ்ளோ மொக்க கதையா இருந்தாலும் அத மெனெக்கெட்டு சொல்ற திறமை இருக்கு. ஆனா ரொம்ப ஓவரா மெனெக்கெடு(க்)றாரோன்னு தோணுது. அழகா செதுக்கிறேன்னு ஆழமா செதுக்கிடிறாரு அதுதான் அவர்க்கிட்ட இருக்கிற பிரச்சனை. என்னதான் அழகா காண்பிக்க முயற்சித்தாலும் ஏதோ ஒண்ணு ஒட்டவிடாம தடுக்குது. இதே சால்ட் அண்ட் பெப்பர்ல மங்காத்தாவும் இருந்தது என்னை அறிந்தாலும் இருந்தது இந்த ரெண்டுல இருக்கிற அஜீத்தும் சிவாகிட்ட இருந்து வெளிப்படுற அஜீத்தும் வேற வேற.

சிவா கதை சொல்ற பாணி ரொம்ப பழசா இருக்கு. அத புது ஃப்ரேம்க்குள்ள கொண்டு வர ரொம்ப போராடுறது ரொம்ப போராகுது. வீரம் தெலுங்கு மசாலா வேதாளம் பம்பாய் மசாலான்னா விவேகம் ஹாலிவுட் மசாலா.

திரை முழுக்க டிஜிட்டல் சூத்திரங்கள ஓடவிட்டா படம் ஹாலிவுட்டா மாறிரும்ன்னு யாரோ அவருக்கு தப்பா பாடம் எடுத்திருக்காங்க. அது கூட பரவாயில்ல வசனமும் ஹாலிவுட் படத்தில பேசிற மாதிரியே இருப்பதுலாம் கொடூரம். சிவாவுக்கு ஒரு நல்ல மெண்டர் கிடைச்சா அவர் படங்கள அவர் கூட சேர்ந்து செதுக்கினா அவர் எங்கயோ போயிருவாரு. ஆனா அவர் இப்டியே பழைய கதைய அதே பழைய டெம்ப்ளேட்ல புது படமா எடுத்துட்டு இருந்தா தமிழ் சினிமாவும் எங்கயும் போகாது அதோட ரசிகனும் எங்கயும் போகமாட்டான்.
-சீனிவாசன் பாலகிருஷ்ணன்

Leave a Response