‘அமைதிப்படை’யின் நவீன வடிவம் தான் ஜ.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ படமாம்..!


அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடங்காதே’. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்து வருகிறார். இவர்களுடன் கதாநாயகியாக சுரபி மற்றும் மந்திரா பேடி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்..

இந்தப்படம் அரசியல் நையாண்டியாக உருவாகியுள்ளதாம்.. சொல்லப்போனால் மணிவண்ணன்-சத்யராஜ் கூட்டணியில் வெளியான ‘அமைதிப்படை போல இது இன்னொருவிதமாக இருக்குமாம். அமைதிப்படை அன்றைய அரசியலை நையாண்டியாக சொன்னது என்றால் இந்தப்படம் இன்றைய அரசியலை சீரியஸாகவே சொல்கிறதாம். சரத்குமார் அரசியல்வாதி கேரக்டரில் தான் நடிக்கிறாராம்.. இன்னொரு அரசியல்வாதி கேரக்டரில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடித்துள்ளாராம்.

Leave a Response