சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இலவச துணிப்பைகள் வழங்கிய திரைப்பட இயக்குநர்

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் ஜேசிஐ எனும் தன்னார்வ தொண்டு அமைப்பு முயன்றுவருகிறது.
இதற்காக ஈரோடு மாநகரம் முழுவதும் பேக் டூ பேக் (back to bag) என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக துணிப்பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இதன் 4 ஆவது திட்டமாக பிப்ரவரி 26 அன்று ஈரோடு கொங்கு கலையரங்கில் ஒரு விழா நடைபெற்றது. அவ்விழாவில் திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரபு கலந்து
கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாகத் துணிப்பைகளை வழங்கினார்.
இந்த விழாவில் ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் கே.கே.பாலுசாமி, எம்சிஆர் நிறுவன இயக்குநர் எம்.சி.ராபின், எம்.சி.நிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட நடிகர் சுப்பு பஞ்சு, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோரும் கலந்து கொண்ட இவ்விழாவை ஜேசிஐ முன்னாள் தலைவர் ஜேசிஎஸ்.அருண்பிரசாத்,
ஜேசிஎன்.நந்தகுமார், தலைவர் ஜேசிகே.கவின்குமார், துணைத்தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இவ்வமைப்பு செய்து வரும் வேலைகளை அனைவரும் பாராட்டினர்.

3 Comments

Leave a Response