‘எண்ணி நாற்பதே நாள்’ ; விஜய்சேதுபதியின் அசத்தல் பிளான்..!


வருடத்திற்கு ஆறு படங்களுக்கு குறையாமல் நடித்து விடுவதுதான் விஜய்சேதுபதியின் திட்டம்.. கடந்த இரண்டு வருடங்களில் இதை ஓரளவு சிரமங்களுடன் நடைமுறைப்படுத்திய விஜய்சேதுபதி இந்த வருடத்தில் இருந்து அதற்காகவே ஒரு தனி திட்டத்தையே வகுத்து விட்டாராம்.

இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு படத்துக்கும் மொத்தமாக நான்ற்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்து விடுவாராம் விஜய்சேதுபதி.. இதற்குள் படப்பிடிப்பு, டப்பிங் சம்பந்தப்பட்ட அவரது பணிகளை படக்குழுவினர் முடித்துக்கொள்ள வேண்டுமாம்.. இதை முடித்துவிட்டே அடுத்த படத்திற்கு போவாராம் விஜய்சேதுபதி..

அதனாலேயே அடுத்த படக்குழுவினர் எனக்காக காத்திருப்பார்கள் என கூறி நாசூக்காக படக்குழுவினருக்கு சங்கடம் வராமல் பார்த்துக்கொள்கிறாராம். ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் குடும்பத்துக்காக சில நாட்கள் ஒதுக்கி சுற்றுப்பயணம் கிளம்பிவிடுகிறாராம் விஜய்சேதுபதி…

Leave a Response