ரசிகர்கள் முன்னிலையில் எமனுக்கு இசை விழா எடுக்கிறார் விஜய் ஆண்டனி..!


‘நான்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனியும், இயக்குநர் ஜீவா சங்கரும் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தனது ரசிகர்களையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார் விஜய் ஆண்டனி..

“ஒரு திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிப்பது ரசிகர்கள். அவர்களின் அன்பும், ஆதரவும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். எனவே ‘எமன்’ படத்தின் பாடல்களை என்னுடைய ரசிகர்கள் மத்தியிலும், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வெளியிட ஆசைப்படுகிறேன். அவர்களை அன்போடு அழைப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்” என்கிறார் விஜய் ஆண்டனி.

Leave a Response