ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்கிறார் மஹிமா..!


தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் வாய்ந்த, ஆனால் சரியான வாய்பு அமையாமல் இருக்கின்ற நடிகைகளில் மஹிமாவும் ஒருவர்.. என்னமோ நடக்குது, சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மஹிமாவுக்கு, அருண்விஜய் ஜோடியாக நடித்துள்ள, விரைவில் வெளியாக இருக்கும் ‘குற்றம்-23’ படம் ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என அந்தப்படத்தின் படக்குழுவினர் உறுதியாக சொல்கிறார்கள்..

இந்தநிலையில் ஜி.வி.பிரகாஷின் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் மஹிமா.. ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து ‘ஐங்கரன்’ என்கிற படத்தில் தான் அவர் நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்த வாய்ப்பு மஹிமாவுக்கு கைமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response