“என் பின்னாடியே ஏன் சுத்துறீங்க” ; இயக்குனரை அதிரவைத்த ஜெயம் ரவி..!


ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ படம் இன்று ரிலீசாகியுள்ளது.. ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்..தனது இரண்டாவது படத்தையும் தன்னை வைத்தே லட்சுமண் இயக்கியது குறித்து ஜெயம் ரவி என்ன சொன்னார் தெரியுமா..?

“ரோமியோ ஜூலியட்’ படம் வெற்றி பெற்றதும் லட்சுமணை அழைத்து அடுத்ததாக நீங்கள் இன்னும் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் வேளைகளில் இறங்குங்கள் என் கூறினேன்.. ஆனால் அவரோ என் கூடவே சுற்றிக்கொண்டு இருந்தார்.. ஒரு கட்டத்தில் ஏன் என்னையே சுற்றுகிறீர்கள்.. என்று கேட்டதும் இன்னொரு படம் உங்களுடன் பண்ண ஆசை என்று சொன்னார். இந்த போகன் கதை நன்றாக இருந்ததால் இரண்டாவது முறையாக இணைந்துள்ளோம்.. இந்தப்படம் நிச்சயம் ஹிட்டாகும்.. இனியாவது என் பின்னாடி சுத்தாம பெரிய ஹீரோக்கள் கிட்ட போங்க லட்சுமண்” என தமாஷாக கூறினார் ஜெயம் ரவி.

Leave a Response