லட்சுமி மேனனுக்கு ‘கருப்பன்’ பட வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்..!


விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் படம் தேனியில் நடக்கும் கிராமத்து கதையாக இருந்தபோதும் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்குத்தான் முதலில் சென்றது. ஆனால் கால்சீட் பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை. அதையடுத்து ஆண்டவன் கட்டளையில் விஜயசேதுபதியுடன் நடித்த ரித்திகா சிங்கை கேட்டனர்.

அவரும் வேறு படத்தில் கமிட்டாகி விட்டதாக சொன்ன பிறகுதான் லட்சுமிமேனனுக்கு சென்றது. அதேசமயம், றெக்க படத்தில் அவர் வெயிட் போட்டிருந்ததை பார்த்து, இரண்டு மனதாக இருந்தனர்.

ஆனால் அவரை போட்டோசெஷனுக்கு அழைத்தபோது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும் வகையில், வெயிட் குறைத்து ஸ்லிம்மாக காட்சி கொடுத்திருக்கிறார் லட்சுமிமேனன். அதோடு, 5 கிலோ வெயிட் குறைச்சிட்டேன். இன்னும்கூட குறைக்க தயாராக இருக்கேன் என்றாராம் அவர்.

Leave a Response