இடைத்தேர்தல் முடிவுகளில் நாம்தமிழர்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

அண்மையில நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நாம்தமிழர்கட்சியை முன்வைத்து மூத்த தமிழறிஞர் எழுதியுள்ள பதிவில்,

தஞ்சாவூர் -நாம் தமிழர் கட்சி வேட்பாளர் :1192 வாக்குகள்,யாருக்கும் வாக்கில்லை:2295 வாக்குகள் (நோட்டா)

அரவக்குறிச்சி :நாம் தமிழர் கட்சி வேட்பாளர் : 793 வாக்குகள்,யாருக்கும் வாக்கில்லை :1538 வாக்குகள்

திருப்பரங்குன்றம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் : 1082 வாக்குகள்,யாருக்கும் வாக்கில்லை : 2214 வாக்குகள்

புதுவை நெல்லிக்குப்பம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் : 90 வாக்குகள்,யாருக்கும் வாக்கில்லை : 621 வாக்குகள்

நா.த.க.வைவிட யாருக்கும் வாக்கில்லைக்கு ஒன்று,ஒன்றரை மடங்கு மிகுதியாக வாக்குகள் விழுந்துள்ளன.
ஒன்றரை இலக்கம் தமிழ் மக்களை அழித்த நிலையில், இந்த மக்களுக்கான ஆற்றுநீர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ,பண்பாட்டு விழுமியங்கள் தடுக்கப்பட்டுள்ள(ஏறு தழுவல்…) நிலையில், அந்த துன்பங்களை எடுத்துச் சொன்ன இயக்கத்திற்கு , விழிப்புணர்வு ஏற்படுத்திய இயக்கத்திற்கு, கட்சியே நடத்தாத ஒரு தன்மைக்குக் கிடைத்த ஓட்டுக்களை விட பாதி வாக்கு என்றால், கட்சியே இல்லாததற்குச் சமம்.!

ஆக, கட்சியை நடத்தவில்லை, கட்டமைக்கவில்லை, மக்களிடம் கொண்டுசெல்லவில்லை என்று பொருளா?! தமிழர் நாட்டில் தமிழருக்கான ஓர் உண்மையான , சரியான கட்சி இன்னும் வந்ததாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருளா?! நாம் இன்னும் சரியான காரணத்தைக் கண்டறியவில்லை என்று பொருளா?!

வடுக திராவிடம், தமிழர் தேசியக் கட்சிகளை மேலெழ என்றுமே விடமாட்டார்கள், விரும்ப மாட்டார்கள் என்பது இப்ப மட்டுந்தான் தெரியுமா-என்ன?! 1944 – தமிழர் கழகத்தை விட்டானா? 1946 -தமிழரசுக் கழகத்தை விட்டானா? 1958 – நாம்தமிழர் இயக்கத்தை விட்டானா? இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எது எதனால் தோற்றார்கள், என்ன கரணியங்களால் தோற்றார்கள் என்று கண்டறிந்து அதைத் தாண்டி / அவனைத் தாண்டி நாம் செயல்பட வேண்டும் !

“பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்” (639)-பேராசான்.
-அருள்நிலா.

Leave a Response