எனக்கு பதவி ஆசை காட்டினார் ஆதவ் – சீமான் வெளிப்படை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்,நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கார்த்திகா போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து மூலனூர் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது….

தூய சக்தி எனக்கூறிவிட்டு,ஊழல்வாதிகளை சேர்த்துக்கொண்டு கட்சி நடத்துகிறார்.இங்கு எவ்வளவோ பிரச்னை இருக்கிறது.காய்கறி விலை ஏறிப்போச்சு.இதைப்பற்றி எல்லாம் அவருக்கு கவலை இல்லை,கண்டுகொள்வதும் இல்லை.தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி கேள்வி கேட்டால், அதற்கு பதிலளிக்காமல் சர்க்காரியா கமிஷன்,மிசா பற்றி பேசுகிறார்.

நான், சும்மாவே காட்டு..காட்டுன்னு காட்டுவேன்,என்னை காட்டு.காட்டு.என்று சொன்னால் என்ன செய்வது? என்று பேசிவிட்டு,என்ன காட்டி இருக்கிறார் என்று பார்த்தால்,வெறும்`படம்’மட்டுமே காட்டியுள்ளார்.சினிமாவில் `வில்லு’படத்தில் ஆடைகளைக் கழற்றும் காட்சிகளை காணொலியில் பதிவிட்டு வருகிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில்,கடைசி இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சம் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தோம் என அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அதில்,இவர்கள் ஏதாவது ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்களா? மக்கள் பிரச்னைக்காக வீதிக்கு வந்து போராடினார்களா? எங்கு வந்து போராடினார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?ஒரு கண்டம் இருந்தது. ஜோசியக்காரன் சொன்னான்னு ஒருவாட்டி மட்டும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தீங்க…அதுவும்,ஜெயிலை சுற்றிப்பார்க்க…அவ்வளவுதான்…அதோடு சரி.

ஆதவ் அர்ஜுனா,என்னிடம் வந்து,எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால்`துணை முதல்வர்’பதவி தருவதாக கூறினார்.நான் ஒப்புக்கொள்ளாததால்,எனது மனைவியிடம் பேசி `வேளாண்துறை அமைச்சர்’ பதவி தருவதாக ஆசை காட்டினார்.கொள்கையை அடகு வைக்க விரும்பாததால் அந்த ஆபர்களை உடனடியாக நிராகரித்து விட்டேன்.இப்படி திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தும் சக்திகளுக்கு பெயர்,தூய சக்தியா…? விவசாயி சின்னத்திற்கு விவசாயிகளே வாக்களிக்காமல் தோற்கடித்துவிட்டு,தற்போது குடிநீர் மற்றும் மின்சார பிரச்னைக்காக அல்லல்படுகிறீர்கள்.

எனது சொந்தத் தொகுதியில் உங்களை நம்பி நின்றேன்.ஆனால்,என்னைத் தோற்கடித்துவிட்டு,யார் என்றே தெரியாத வேட்பாளருக்கு விசிலை பார்த்து வாக்களித்துள்ளீர்கள்.உரிய வரி செலுத்தாமல்,சொகுசு கார் வாங்கி வந்த ஊழல் வழக்கு அவர் மீதே இருக்கு.இந்த இலட்சணத்தில் எங்களைப்பார்த்து திரள் நிதி என்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக டிக்கெட்கூட பிளாக்லதான் வித்தாங்க.சினிமாவில் இருந்தபோது பிளாக்கில் டிக்கெட் வித்திங்க,முதல்வர் ஆன பின்னரும் ஜனநாயகன் படத்துக்கு எதற்கு பிளாக்கில் டிக்கெட் விற்றார்கள்.? இவர்களெல்லாம், எம்மாத்திரம்? இந்த கோட்டு- சூட்டு எல்லாம் நம்மகிட்ட எடுபடாது.

விஜய் என்ன சொன்னார்? ஊழல் சக்தி என்றார்? இப்போது அங்கிருந்து வந்தவர்களை சேர்த்துக்கொண்டுதான் ஆட்சி நடத்துகிறார்.இது ஊழல் சக்தி இல்லையா? இவர்கள் என்ன வாஷிங்மெஷினா?

ஒருமுறை விஜயுடன் வாகனத்தில் பயணம் செய்யும்போது, அண்ணா,காங்கிரஸ் கட்சியைச் சேர்த்துக்கொள்ளலாமா? என்றார்.நான்,அவர்களை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்வாய்…? என்றேன்.கச்சத்தீவு விவகாரம்,காவிரி நதிநீர் பிரச்சினை,ஈழத்தமிழ் பிரச்னை ஆகியவற்றில், காங்கிரசுடன் கூட்டணி வைத்து, எப்படி பேசமுடியும்? என்று கேட்டேன்.இந்த நாட்டில் இருக்கும் மொத்த தீமைக்கும் காரணம் காங்கிரஸ் கட்சிதான்.இந்தியாவில் இருக்கும் எல்லா தீயதிட்டத்திற்கும் வேர் தேடிச் சென்றால் அது காங்கிரசாகத்தான் இருக்கும்

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response