
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன் கிட்டு’ படம் 1985ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை. அதை கற்பனை கலந்து உருவாக்கி உள்ளார் சுசீந்திரன். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, பார்த்திபன் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார், பழனி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் கிட்டு. அவனுக்கு படித்து கலெக்டராகி பின்தங்கியுள்ள தனது ஊரையும் மக்களையும் உயர்த்த வேண்டும் என்கிற ஆசை.
தனது லட்சியமான கலெக்டர் ஆவதற்கு அவன் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. நன்றாக படிக்கும் ஒருவனை ஏழை சமூகத்திலிருந்து வந்தவன் என்பதற்காக அவனை எப்படியெல்லாம் தடுக்கிறது இந்த சமூகம் என்பது திரைக்கதை. கிட்டு கலெக்டர் ஆனாரா, அல்லது பாதை மாறினாரா என்பது மீதிக்கதை. இவரை கலெக்டர் ஆக படிப்பதற்கு தூண்டி விடும் பிரிண்டிங் பிரஸ் நடத்துபவராக நடித்துள்ளார் பார்த்திபன்.


