
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான R.சுந்தர்ராஜன் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் தனது கையால் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.. இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவர் ரொம்பவே மகிழ்ந்து போயிருந்தார்..
ஆர்.சுந்தர்ராஜன் நடிகர் என்றாலும் அடிபடையில் அவர் ஒரு இயக்குனர்.. ஆனால் அவரை இந்த விழாவுக்கு வலுக்காட்டாயமாக வரவழைத்ததவர் நடிகர்சங்க தலைவரான நாசர்தான். இந்தவிழாவில் ஆர்.சுந்தர்ராஜன் பேசியபோது அவரது பேச்சிலும் இது வெளிப்பட்டது.,
“நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவை சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு நீங்கள் விழாவை சிறப்பிக்க வேண்டும் வர வேண்டும் என்று கூறினார். நான் அதற்க்கு நாளை காலை நினைவுபடுத்துங்கள் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறினேன். திரும்பவும் காலையில் தொலைப்பேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தினார்.
விட்டால் என் வீட்டிற்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார் தலைவர் நாசர். அவர் மனதளவில் எப்போதும் நல்ல எண்ணங்களை கொண்டவர். எப்போதும் அவர் நல்லதே நினைப்பதால் அவருக்கு எப்போதும் நல்ல பெயரே இருந்து வருகிறது. இது தான் அவரை பற்றி கிசுகிசு வராததற்கு முக்கிய காரணம். தலைவராக இருப்பதற்கு நாசருக்கு எல்லா தகுதியும் உள்ளது” என்றார் ஆர்.சுந்தர்ராஜன்.


