டாஸ்மாக்கில் கிடைக்கும் கணக்கில் வராத ரூ.1,500 கோடி வருமானம் யாருக்கு? கொங்குநாடு ஜனநாயக கட்சி கேள்வி.G.K.நாகராஜ் அறிக்கை.
டாஸ்மாக்கில் ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.1,500கோடி யாருக்கு?தமிழகத்தில் தினமும் ரூ.64இலட்சம் குவார்ட்டர் பாட்டிலிலும் அத்துடன் அரை பாட்டில்,முழு பாட்டில்,பீர் பாட்டில் என ரூ.10 இலட்சம் பாட்டில்களும் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்றன.
குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.5–ம்,அரை பாட்டிலுக்கு ரூ10ம், முழுபாட்டிலுக்கு ரூ.20-ம்,பீர் பாட்டிலுக்கு ரூ.10-ம் விற்பனை விலைக்கு மேல் அதிகம் விற்கப்படுகிறது.இது அரசின் டாஸ்மாக் வருமானக்கணக்கில் வருவதில்லை.
கணக்கில் வராத உபரி வருமானம் குவார்ட்டர் பாட்டிலால் தினமும் ரூ.3.5 கோடியும்,அரை,முழு மற்றும் பீர் பாட்டிலால் ரூ.60 இலட்சமும் கிடைக்கிறது.ஆக மொத்தம் மாதத்திற்கு ரூ.123 கோடி. வருடத்திற்கு ரூ.1,500 கோடி உபரி வருமானம் கிடைக்கிறது.
எந்த டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களுக்கு ரசீது தருவதில்லை.ஆக மதுவால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.30,000 கோடி போக 5% உபரிவருமானம் ரூ. 1,500 கோடி யாருக்குச் செல்கிறது.
தோராயமாக ஒரு மாவட்டத்திற்கு ரூ.5கோடி உபரி வருமானம் கிடைக்கிறது.அதுபோக காலி பாட்டிலால் கிடைக்கும் வருமானம்,பார் நடத்த அனுமதிப்பதால் கிடைக்கும் வருமானம் என கணக்கிலற்ற அளவில் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கின்றது.
உயர்நீதிமன்ற நீதிபதி N.கிருபாகரன் ஏன்? பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.அதையடுத்து அவர் கேட்ட பதினாறு கேள்வி அடங்கிய வழக்கை பொதுநல வழக்காக தலைமைநீதிபதி மாற்றியிருக்கிறார்.அதில் கொங்குநாடு ஜனநாயக கட்சியும் மனுதாரராக விண்ணப்பித்திருக்கிறது.அதில் டாஸ்மாக் உபரி வருமானம் பற்றியும் விவரங்கள் அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.