தீபாவளிக்குப்பின் தான் வெளிவருகிறார் ‘வீரசிவாஜி’..!


ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் களம் இறங்குவதால் விக்ரம் பிரபு, ஷாம்லி, நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீரசிவாஜி’ படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதம் தள்ளிப்போயுள்ளது.. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ‘தகராறு’ கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருவதால் தற்போது இப்படத்தின் வெளியீடு தீபாவளி முடிந்தவுடன் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. நவம்பர் மாத வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

Leave a Response