
விக்ரம்பிரபு தீயணைப்பு வீரராகவும், நாயகி நிக்கி கல்ராணி மருத்துவராகவும் நடித்துள்ள படம் நெருப்புடா. இந்தப்படத்தில், வருண், ராஜேந்திரன், நாகிநீடு, ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்குக் கதை, திரைக்கதை, இயக்கம் – அசோக்குமார்.
முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால்,கேத்தரீன் தெரஸா நடித்திருக்கும் படம் `கதாநாயகன்’ .
இவ்விரு படங்களும் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகின. இரண்டு படங்களுமே தோல்வியைத் தழுவி இருக்கின்றன.
அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு காரணமும் அவற்றில் ஒன்று.
அது என்ன தெரியுமா?
நெருப்புடா படத்தின் இயக்குநர் அசோக்குமார், இந்தப்படத்தின் மையக்கதையை ஒரு எழுத்தாளரிடம் சொல்லி, அவரிடம் திரைக்கதை வசனம் எழுதி வாங்கினாராம். அவர் எழுதிக்கொடுத்த பின்னர் அவருக்கு எந்த ஊதியமும் கொடுக்காமல் விட்டதோடு அவர் பெயரை எங்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதைவிட மோசமாக, விஷ்ணுவிஷாலின் கதாநாயகன் படத்திலும் நடந்திருக்கிறதாம். இந்தப்படத்தை முதலில் வேறு பெயரில் வேறொரு இயக்குநர் இயக்கியிருக்கிறார். படம் முடிந்தபின், இந்தப்படத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு அவரை நீக்கிவிட்டார்களாம்.
இப்படி இரண்டு படங்களிலும் எழுத்தாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அவர்களின் மனவேதனையுமே இப்படங்களின் தோல்விக்குக் காரணம் என்று திரையுலகில் பேச்சு.


