
கதாநாயகனாகவும் எதிர்நாயகனாகவும் இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்திருப்பதால் படத்துக்கு இருமுகன் என்று பெயர்.
இரட்டைவேடங்களிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம். படத்தில் அவர் ராணியாக வருவதைக்காட்டிலும் ராஜாவாக வருகிற காட்சிகளில் அதிக வரவேற்பைப் பெறுகிறார்.
வில்லன் வேடத்துக்காக நிறைய உழைத்திருக்கிறார். அவருக்கு அது புதிதில்லை என்பதாலேயே அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே அந்த வேடத்தில் வேறொருவரை நடிக்க வைத்திருக்கலாம்.
நாயகி நயன்தாராவுக்கும் இரண்டு முகங்கள். அவர் வருகிற காட்சிகள் வரவேற்புக்குரியவை. விக்ரம் நயன்தாரா ஆகிய இருவருக்குமான காதல் காட்சிகள் இன்னும் இருந்திருக்கலாம். .
நித்யாமேனன் கொஞ்ச காட்சிகளே வந்தாலும் பொருத்தமாக இருக்கிறார். அவருடைய மரணம் எவ்வித ச்லனமும் இல்லாமல் கடந்துபோவது திரைக்கதைக்குப் பலமாக இல்லை.
தம்பிராமையா அவ்வப்போது சிரிக்கவைக்கிறார். இரண்டு நிமிடம் அமைச்சரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று விக்ரம் சொன்னதும் அவர் பதுறும் காட்சியில் திரையரங்கு சிரிப்பில் மூழ்குகிறது.
இந்திய ஏஜெண்ட், அதிநவீன தொழில்நுட்பத்தில் திளைக்கும் வில்லன் கூட்டம், விசாரணை, கண்டுபிடிப்பு இவையெல்லாம் 1986 இல் கமல் நடித்த விக்ரம் படத்திலேயே பார்த்துவிட்டோம் என்பதால் எதுவுமே புதிதாகத் தெரியவில்லை.
ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலரை வைத்துக்கொண்டு மொத்தப் படமும் பயணம் செய்கிறது. அது புதிது.
ஹாரிஸின் இசையமைத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம்.
இயக்குநர் ஆனந்த்ஷங்கர் புகழ்பெற்ற எழுத்தாளரின் பேரன் என்பதால் நாயகனுக்கு இன்னொரு புகழ்பெற்ற எழுத்தாளரான அகிலன் பெயரை வைத்துவிட்டார் போலும்.
முதல்பாதியில் இருக்கிற வேகம் இரண்டாம் பாதியில் இல்லாதது பெரிய பலவீனம்.


