ஆயுத பூஜைக்கு மோத தயாராகும் இளைஞர் பட்டாளம்..!


பொங்கல், தீபாவளி பண்டிகைகளை போல ஆயுதபூஜையும் சினிமாக்காரர்களுக்கு ஒரு திருவிழா நாள்.. அந்தநாளில் தங்களது படம் வெளியாகவேண்டும் என போட்டி போடுவதும் வழக்கம் தான். அந்தவகையில் இந்தவருடம் விஜய், அஜித், சூர்யா என இரண்டாம் கட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகத காரணத்தால், அதற்கடுத்த இளைஞர் பட்டாளம் தங்களது படங்களுடன் மோதலுக்கு தயாராகி வருகிறது.

ஏற்கனவே ‘ரெமோ’, ‘கவலை வேண்டாம்’, ‘தேவி’ ஆகிய படங்கள் அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவற்றோடு ‘றெக்க’ படமும் இணைந்துள்ளது. 4 படங்களுமே பெரிய முதலீடு படங்கள் என்பதால், அனைத்து படங்களுக்குமே தியேட்டர்கள் கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். அந்தவகையில் ஏதாவது 2 படங்கள் போட்டியில் இருந்து ஜகா வாங்கினாலும் வாங்கலாம்.

Leave a Response