க்ளைமாக்ஸ் விவகாரம் ; தளபதி’ மாறவில்லை.. ‘கபாலி’ தான் மாறினார்..!


கபாலி’ படத்தில் கிளைமாக்ஸில் ரஜினி அவரது ஆட்கள் ஒருவரால் சுட்டுக்கொல்லப்படுவது போல முடித்திருந்தார்கள்.. அதை காட்சியாக காட்டவில்லை என்றாலும் முடிவு அதுதான். அதை தமிழ் ரசிகர்கள் விரும்பினார்களோ இல்லையோ, மலேசியாவில் வெளியான கபாலி படத்தில் மட்டும் இந்த க்ளைமாக்ஸ் இடம்பெறவில்லை.

மாற்றப்பட்டது ரசிகர்களுக்காக அல்ல.. மலேசிய நாட்டு சட்ட விதிகளுக்காத்தான்.. காரணம் அங்கே சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. அதனால் தான் முழுப்படமும் அங்கே எடுக்கப்பட்ட காரணத்தால், அங்கேயுள்ள சட்டவிதிகளை மதிக்கும்படியாக ‘கபாலி மலேசிய போலீசில் சரணடைந்தார்’ என டைட்டில் கார்டுடன் கிளைமாக்ஸை மாற்றினார்கள்..

25 வருடங்களுக்கு முன் வெளியான ‘தளபதி’ படத்தில் கூட தமிழில் ரஜினிக்காக ஒரு க்ளைமாக்ஸும் (மம்முட்டி இறப்பது), மலையாளத்தில் மம்முட்டி ரசிகர்களுக்காக ஒரு க்ளைமாக்ஸும் (ரஜினி இறப்பது) மணிரத்னம் வைத்தார் என சொல்லப்பட்டதுண்டு.. இப்போதும் கூட பலர் அதை உண்மைதான் என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் மணிரத்னமே ‘தளபதி’ படத்திற்கு இரண்டு மொழிகளிலும் ஒரே க்ளைமாக்ஸ் தான் படமாக்கப்பட்டது என அந்த செய்தியை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response