நுங்கம்பாக்கம் சுவாதி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த
ஒய்.ஜி. மகேந்திரன் , எஸ்.வி சேகர் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக் கோரி நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் , 08-07-2016 அன்று மாலை 3-00 மணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இனி எவனும் பொய்யான தகவல் பரப்பி முஸ்லீம்களை சீண்டக் கூடாது என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
அதற்கு முன்பாகவே நடிஅக்ர் ஒய்.ஜி.மகேந்திரன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதனால் ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ஜெ.ரகீம் வெளியிட்டுள்ள செய்த்க்குறிப்பில்,
நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் வாபஸ் ..
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் தயாரிப்பாளர் ஆதம் பாவா ஆகியோருக்கு
ஈ-மெயில் மூலம் அனுப்பிய கடிதத்தில் நான் ஏற்கனவே முகநூலில் மன்னிப்பு கேட்டு உள்ளேன் .
மீண்டும் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்
நான் எந்த ஒரு மதத்திற்க்கும் பாராபட்சமாக இருந்தது இல்லை என்னுடைய நாடக குழுவில் சுமார் 10 ஆண்டுகளாக முஸ்லீம்கள் உள்ளனர் ..
எனவே நான் முஸ்லீம்களுக்கு எதிரி அல்ல
நான் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் , மதம் , சார்ந்த அமைப்புகளில் இல்லை நாடகம் மற்றும் சினிமா போன்றவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன் ..
நான் எப்போதுமே இது போன்று செய்தது இல்லை இந்த முறை கவனக்குறைவால் நடந்துவிட்டது அதற்க்காக முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்தியதிற்க்காக மன்னிப்பு கோருகின்றேன் ..
என்னுடைய இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ரமலானுக்கு அனைத்து முஸ்லீம் சகோதர , சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள் என இந்திய தேசிய லீக் கட்சிக்கு ஈ-மெயில் அனுப்பி உள்ளார்
ஏற்கனவே நடிகர் மனோபாலா தயாரிப்பாளர் ஆதம் பாவா மூலம் வாய்ஸ் மெஸஜ் அனுப்பி இருந்தது குறிப்பிடத் தக்கது எனவே,
இந்த முற்றுகை போராட்டம் நடத்த இருந்த சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை செய்து இந்திய தேசிய லீக் கட்சி இன்று 08-07-2016 மாலை 3-00 மணிக்கு நடத்த இருந்த நடிகர் சங்க முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்படுகின்றது என்று கூரியிருக்கிறார். அதே நேரம் ஒய்.ஜி.மகேந்திரன் மீது கொடுத்த புகார் இந்திய தேசிய லீக் கட்சி வாபஸ் பெறாது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.