தனி ஈழம் பெற உதவவேண்டும் – ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு தெரிவித்து  தமிழர் தேசிய முன்னணியின்தலைவர் பழ. நெடுமாறன்விடுத்துள்ளஅறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். ..

காமராசர், எம்.ஜி.ஆர். ஆகியோருக்குப் பிறகு தமிழக முதல்வராகத் தொடர்ந்து இரண்டாம் முறையாகவும், 6ஆவது தடவையாகவும் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் தேர்தல்அறிக்கையில்வாக்குறுதிஅளித்தபடி மதுவிலக்கைப் படிப்படியாக செயற்படுத்தும் நடவடிக்கையும் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் சில்லறைகடைகளை மூடியும், மதுபானக்கடைகள் பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்றஉத்தரவில் முதல்கையெழுத்திட்டதை மனமார வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
மதுவினால் சீரழிந்தஇலட்சக்கணக்கானகுடும்பங்களைச் சேர்ந்த பெண்களின்கண்ணீரை துடைத்ததற்காக நன்றிகூறுகிறேன்.
அதைபோல, கூட்டுறவுவங்கிகளிலிருந்து சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தரக்காலக்கடன் மற்றும் நீண்டகாலக்கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்துவிட்டதன் மூலம் அழிவின் விளிம்பிலிருந்து தேம்பிய இலட்சக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களைக் கரையேற்றியதற்காக முதல்வரைப் பாராட்டுகிறேன்.
படித்த பெண்களுக்கு திருமண நிதிஉதவித்திட்டங்களின் கீழ் நிதிஉதவியுடன் ஒரு சவரன் தங்கம் வழங்க ஆணைப்பிறப்பித்து ஏழை, எளிய பெண்களின் வாழ்வில் ஒளிபிறக்க வகை செய்ததற்காகவும் வாழ்த்துகிறேன்.
கட்டணம் இல்லாமல் 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்குகட்டணம் இல்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணம் இல்லாத மின்சாரத்தை 750 யூனிட்டுகளாகவும் உயர்த்தி வழங்கியதற்காகப் பாராட்டுகிறேன்.

தேர்தல் வேளையில் கூறியபடி தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர் அகதிகளுக்குஇரட்டைக் குடியுரிமை வழங்கவும், ஈழத்தமிழர்கள் தனி ஈழம் பெறவும் உதவவேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்

Leave a Response