சிபிஎம் கட்சியின் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு – விவரம்

திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்குக் கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் 5 வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

2026 தமிழ்நாடு சட்​டப்​பேரவைத் தேர்​தலை​யொட்டி திமுக​வுடன் நடை​பெற்ற தொகுதிப் பங்​கீட்டுப் பேச்​சு​வார்த்​தை​யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகு​திகள் ஒதுக்கப்பட்டன.

தொகு​தி​கள் உள்ள அந்​தந்த மாவட்​டங்​களில் மாவட்​டக் குழுக் கூட்​டத்​தைக்​ கூட்​டி வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.

இறு​தி​யாக கட்​சி​யின் மாநில செயற்​குழு உறுப்​பினர் கே.அர்ச்​சுணன் தலைமையில் சென்னையில் நடந்த
கூட்​டத்தில் கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் பெ.சண்​முகம், அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர்
கே.​பால​கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.இதன்​முடி​வில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, என்​.​பாண்டி பழநி தொகு​தி​யிலும், எம்​.சின்​னதுரை கந்​தர்​வக்​கோட்​டை​யிலும் (தனி), ஆர்​.செல்​லசாமி பத்​ம​நாபபுரத்​திலும், எல்​.சுந்​தர​ராஜன் திரு​வொற்​றியூரிலும், டி.லதா கீழ்​வேளூர் (தனி) தொகு​தியிலும்
போட்​டி​யிடு​வார்​கள் என அறிவிக்​கப்​பட்​டது.

இவர்களில் எம்​.சின்​னதுரை, கந்​தர்​வக்​கோட்​டை​ சட்டமன்ற உறுப்பினராக உள்​ளார். என்​.​பாண்டி கடந்தமுறை
திண்​டுக்​கல்​லில் போட்​டி​யிட்டுத் தோல்​வியடைந்​திருந்த நிலை​யில் அவருக்கு மீண்​டும் வாய்ப்பு
வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் கடந்த தேர்​தலில் கீழ்​வேளூரில் வெற்​றி​பெற்ற நாகை மாலிக்கு இம்​முறை வாய்ப்பு
வழங்​கப்​பட​வில்​லை. அவருக்குப் பதிலாக கட்​சி​யின் நாகப்​பட்​டினம் மாவட்டச் செயற்​குழு உறுப்​பினர் டி.ல​தாவுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

Leave a Response