நாம் தமிழர் கூட்டத்தில் இடையூறு – விஜய் கட்சியினர் தலைமறைவு

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனியில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியதாவது….

தவெக நடத்திய கரூர் கூட்டத்தின் போது,2000 கொடிகள் சாக்கடைக்குள் கிடந்தன.கட்சிக் கொடியை சாக்கடையில் போட்ட தற்குறிகள்தான் தவெக கூட்டம். திமுக, அதிமுக மீது புகார்களை கூறிவிட்டு, நாங்கள்தான் தூய சக்தி என சொல்லும் பக்கா மாஸ், 2015 ஆம் ஆண்டு ‘புலி’ படத்திற்கு வாங்கிய வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டு,அவர் ஒரு வரி ஏய்ப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது.இது வரி ஏய்ப்பு புலி,ஊரை ஏமாற்றும் புலி,பனையூரில் பதுங்கிக் கொண்ட புலி,ஊழல் செய்யும் புலி.இது செத்த புலி.

தான் மட்டுமே மாஸ் என்றும் கிரவுடு வருகிறது என்றும் கூறுபவர்கள், தமிழ்நாடு முழுவதும் ஆட்களைத் திரட்டி போஸ்டர் ஒட்டி கூட்டம் சேர்க்கின்றனர். நடிகர், நடிகைகளைப் பார்க்க கூட்டம் கூடுவது இயல்பு. ஒருவேளை தவெக ஜெயிச்சு சட்டமன்றம் போனால், அமைச்சர்கள் யாரு? லெப்ட் பாண்டி அதாவது இந்த பீச்சாங்கை பாண்டி, புஸ்சி ஆனந்த், 7 கட்சிக்கு போன நிர்மல் குமார், லயோலா மணி இவங்களா? தமிழ்நாடு என்ன தரங்கெட்டா போயிருச்சு? தவெக துவங்கிய இரண்டு ஆண்டுகளில் என்ன சாதிச்சிருக்கு. கட்சி ஆரம்பிச்ச மாநாட்டில் சொல்லாமல் திடீர்னு இப்ப,எம்ஜிஆர், ஜெயலலிதா ரோல் மாடல்ன்னு சொல்றாரு.

கூட்டணிக்கு அலைந்துட்டு இன்னைக்கு தனித்து விடப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ், ஓபிஎஸ் கூட கூட்டணிக்கு வரல. தவெக அரசியல் காமெடி பீஸ், பொலிட்டிக்கல் என்டர்டெய்னர். டிடிவி.தினகரன் எமகாதகன். அவரை பாக்கணும்னாலே 10 பவுன் கேட்பார்.அவரு அதிமுக கூட்டணிக்கு போயிட்டாரு.பக்கா மாஸ் கூட உத்தமபாளையம் சாம்பிராணி பாய்,ஒத்த ஓட்டு முஸ்தபா மட்டும்தான் இருக்காங்க.தேனியில தவெக 4 சதவீத ஓட்டுகூட வாங்காது.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென தவெக கட்சியினர் 6 பேர் இரண்டு துள்ளுந்துகளில் வந்து அப்பகுதியில் ‘டிவிகே… டிவிகே…’ என்று சத்தமிட்டபடி சென்றனர்.

அவர்களை நாதகவினர் விரட்டியதும் தப்பினர். இதனால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தவெகவினரின் சத்தத்தால் கோபமடைந்த சாட்டை துரைமுருகன்,

அரசியல் தெளிவற்ற கூட்டம் என்ன செய்யும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.உங்களுக்குத் தெம்பிருந்தா, திராணியிருந்தா, ஆண்மையிருந்தா, ஆளுமைத் தன்மை இருந்தா…நாளைக்கு இதே இடத்தில் கூட்டம் போட்டு விஜய் என்ன புடுங்கி நட்டாருன்னு சொல்லு. என்னை விட்டா டீசன்டா பேசுவேன். சீண்டினா ஏழு மடங்கு ஏறி அடிப்பேன். உங்கள் தலைவன் விஜய் ஓடுகாலி. எங்கள் தலைவன் பிரபாகரன். சும்மா சீண்டக் கூடாது. ஓரமாப் போனியா… டீ வித்தியா… ஓடிப் போ. விசிலை வெச்சி ஊதிகிட்டு திரி. மடக்கி, மடக்கி ஊதினாலும் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. சொன்னான் ஒருத்தன், தேனிக்கு வந்துட்டு உசிரோட போக முடியாதுன்னு. இங்கதாண்டா நிக்குறேன். இங்கதான் நிக்குறேன். குண்டர் சட்டம், என்ஐஏ வழக்கு பார்த்துட்டு வந்திருக்கிறேன். மண்டைல மசுறு இல்லாதவனெல்லாம் உசிரு பத்தி பேசுறான். இந்த தற்குறி கூட்டத்தை ஒழிக்கணும். ஒரு கட்சி கூட்டம் நடக்கும்போது கோஷம் போடுவது பரிதாபம். டிவிகே என்ன புரட்சி முழக்கமா? என ஆவேசமாகப் பேசினார்.

அதன்பின்,கூட்டத்தில் இடையூறு செய்ததாக நாதகவினர் அளித்த புகாரின்பேரில், தேனி காவல்துறையினர் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி, சின்னமனூரை சேர்ந்த சலாம், கவுதம், வசந்த், தனவேந்தன் ஆகியோர் மீது மாற்றுக் கட்சி பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, தவெகவின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி, 10 நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சி கொள்கைப்பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக ஒரு மிரட்டல் காணொலியை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அதில்,என்ன நெனச்சு அரசியல் பேசுறடா,கருத்துகள் பேசுடா,சும்மா மேடைக்கு மேடை ஏறி தேவையில்லாம பேசுற நீ,செருப்படி வாங்கப்போற.தவெகவோட தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி சொல்றேன்.நீ ஒரு அப்பன்,ஆத்தாவுக்கு பொறந்திருந்தா தேனி பக்கம் வந்து பாரு என கூறியிருந்தார்.

இதுகுறித்து நாதகவினர் அளித்த புகார் தொடர்பாக லெப்ட் பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் இடையூறு செய்ததாகவும் வழக்குப் பதிவானதை அறிந்த லெப்ட் பாண்டி தலைமறைவானர். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Response