ஆண்டிப்பட்டி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டி? – தடதடக்கும் புதிய தகவல்

2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் கட்சி ஆகியன போட்டியிடவிருக்கின்றன.

இவற்றில் அதிமுக கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை.அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் அந்தக் கூட்டணியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுக பாஜக கூட்டணிக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால்,தமிழ்நாட்டில் அக்கூட்டணியின் தலைவர் என்று சொல்லப்படும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை இதுவரை சொல்லவில்லை.

எனினும் அவர்களும் இந்தக் கூட்டணியில்தான் இருக்கிறார்கள் என்றும் தேர்தலின்போது அவர்கள் போட்டியிடவிருக்கும் தொகுதிகள் எவை? என்பது குறித்த மறைமுகப் பேச்சுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்நிலையில்,அக்கூட்டணிக்குள் இருப்பதாகச் சொல்லப்படும் டிடிவி.தினகரனின் அமமுக கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது பேசி முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றொரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

அதை மெய்ப்பிக்கிற மாதிரி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிடவிருக்கிறார் என்கிற தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

அதனால்,அந்தத் தொகுதிக்குள் தொடக்கக்கட்ட வேலைகளை அவர் தொடங்கிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.மேல்மட்டத்தில் உள்ளோர் மத்தியில் மட்டும் பரவிக் கொண்டிருக்கும் இந்தத் தகவல் இன்னும் சில நாட்களில் கட்சி நிர்வாகிகளிடம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்தத் தொகுதி இப்போது திமுக வசம் உள்ளது.வருகிற தேர்தலில் அந்தத் தொகுதியை திமுகவிடமிருந்து கைப்பற்ற வேண்டுமெனில் அப்பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து வலிமையான ஒருவர் இருந்தாக வேண்டும் என்கிற அடிப்படையில் டிடிவி.தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

முதலில் அதிமுக பாஜக கூட்டனிக்குள் அமமுக இருக்கிறது என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வரவேண்டும் அது வந்தவுடன்,ஆண்டிப்பட்டி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிடவிருக்கிறார் என்கிற செய்தி வெளிவரும் என்கிறார்கள்.

உறுதிப்படுத்தப்படாமல் உலவிக் கொண்டிருக்கும் இந்தத் தகவல் சில வாரங்களில் உறுதிப்படுத்தப்படும் என்றொரு பக்கமும் இந்தத் தகவலில் கொஞ்சமும் உண்மையில்லை என்றொரு பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response