ஏபரல் 19 தமிழ்நாட்டில் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2024, 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.

தேர்தல் தேதியை இன்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார்.

அவருடைய அறிவிப்பு விவரம்…..

▪️ நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

▪️ ஆண் வாக்காளர்கள் – 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் – 47.1 கோடி, மூன்றாம் பாலினம் – 48,044 பேர் உள்ளனர்.

▪️ 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம்

முதல் முறை வாக்காளர்கள் -1.8 கோடி

85+ வயதுடையோர் – 82 இலட்சம்

20 – 29 வயதுடையவர்கள் – 19.74 கோடி

100 வயதை கடந்தவர்கள் – 2.18 இலட்சம்

மாற்றுத்திறனாளிகள் – 88.4 இலட்சம்

10.50 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.

தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் மார்ச் 20 ஆம் தேதி.கடைசி மார்ச் 27.

வேட்புமனு பரிசீலனை மார்ச் 28.
திரும்பப்பெற கடைசிநாள் மார்ச் 30.

இரண்டாமகட்டத் தேர்தல் ஏப்ரல் 26
மூன்றாம் கட்டத் தேர்தல் மே 7
நான்காம் கட்டத் தேர்தல் மே 13
ஐந்தாம்கட்டத் தேர்தல் மே 20
ஆறாமகட்டத் தேர்தல் மே 25
ஏழாம் கட்டத் தேர்தல் ஜூன் 1

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!

Leave a Response