குஜராத் அதானி துறைமுகத்தில் 2 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் திமுக வர்த்தக அணித் தலைவரும்,கவிஞருமான காசிமுத்து மாணிக்கம் கூறியதாவது….

மழை என்றால் சிரபுஞ்சி,மலர் என்றால் மல்லிகை,விழி என்றால் ராஜ விழி,ஐதராபாத், செகந்திராபாத் என்றால் பிலிம் சிட்டி,ஜெய்ப்பூர் என்றால் பேலஸ் சிட்டி,மதுரை என்றால் டெம்பிள் சிட்டி,குஜராத் என்றாலோ போதைப் பொருள் கடத்தலின் தாய்த் தொட்டில்.

இந்தியாவின் தூய்மையும், பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் துறைமுகம் வழியாக வரும் போதைப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும்.ஜனாதிபதி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குஜராத் வழியாகத்தான் வெளிநாடுகளுக்குப் போதைப் பொருள் கடத்தப்படுகிறது.குறிப்பாக அதானி துறைமுகம் வழியாக கடத்தப்பட்ட போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத்துறையினர்,மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் கூட பல ஆயிரம் கோடி மதிப்பு 2 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.ஒரு முறை, இரு முறை அல்ல பல முறை போதைப் பொருள் பிடிபட்டுள்ளது.

போதைப் பொருளை மட்டும் பிடிக்கும் ஒன்றிய அதிகாரிகள், ஏன் போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகளைப் பிடிக்கவில்லை.யார் அதில் உடந்தை? இது ஊருக்கே தெரியும். பிரதமர் மோடி,எந்தத் தொழில் அதிபருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதோ அந்தத் தொழிலதிபரின் துறைமுகத்தில்தான் அதிகமாகக் கடத்தப்படுகிறது.அதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ஆனால் இன்று குஜராத்தில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி மோடி பதில் பேசுகிறாரா? ஏன் பேச மறுக்கிறார்? போதைப் பொருளின் தாய்மடி குஜராத் மாநிலமும், அதன் கடற்கரை நகரங்களும்தான் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response