2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள்

2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாஉ அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில்…..

ஒன்றிய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் “விளக்கம்” என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ஞாயிற்றுக்கிழமைகளுடன்” பின்வரும் நாட்களும், 2024-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

சனவர் 1 – திங்கட்கிழமை – ஆங்கிலப் புத்தாண்டு
சனவர்.15 – திங்கட்கிழமை – பொங்கல்
சனவரி 16 – செவ்வாய்க்கிழமை – திருவள்ளுவர் தினம்
சனவரி .17 – புதன்கிழமை – உழவர் திருநாள்
சனவரி.25 – வியாழக்கிழமை – தைப்பூசம்
சனவரி .26 – வெள்ளிக்கிழமை – குடியரசு தினம்
மார்ச்.29 – வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி
ஏப்ரல்.1 – திங்கட்கிழமை – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
ஏப்ரல்.9 – செவ்வாய்க்கிழமை – தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல்.11 – வியாழக்கிழமை – ரம்ஜான்
ஏப்ரல்.14 – ஞாயிற்றுக்கிழமை – தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
ஏப்ரல்.21 -ஞாயிற்றுக்கிழமை – மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல்.21 – ஞாயிற்றுக்கிழமை – மே தினம்
ஜுன்.17 – திங்கட்கிழமை – பக்ரீத்
ஜுலை.17 – புதன்கிழமை – மொகரம்
ஆகஸ்ட்.15 – வியாழக்கிழமை – சுதந்திர தினம்
ஆகஸ்ட்.26 – திங்கட்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர்.7 – சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர்.16 – திங்கட்கிழமை – மிலாதுன் நபி
அக்டோபர்.2 – புதன்கிழமை – காந்தி ஜெயந்தி
அக்டோபர்.11 – வெள்ளிக்கிழமை – ஆயுத பூஜை
அக்டோபர்.12 – சனிக்கிழமை – விஜய தசமி
அக்டோபர்.31 – வியாழக்கிழமை- தீபாவளி
டிசம்பர் .25 – புதன்கிழமை – கிறிஸ்துமஸ்

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response