இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்று பேசியதாவது….
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கெல்லாம் பொதுத்தேர்வை நடத்தச் சொல்கிறது.இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்.
இந்திய ஒன்றியத்தில் மாநிலங்கள் மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டுள்ளன. அதனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற கல்விக் கொள்கையை உருவாக்க அதிக உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்மட்டும் போதாது தரமான கல்விகிடைக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.
அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.