தலைக்கு ஆயிரம் ரூபாய் – பணத்தைக் கொட்டிய எடப்பாடி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அறிமுகப் பொதுக்கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோடு வேப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்துக்கு அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜனதா தேசிய செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, விவசாய சங்கத்தை சேர்ந்த பெரியசாமி, மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் என்பதால் அவர்கள் முன் தன் செல்வாக்கை நிரூபிக்க பலகோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

கூட்டத்திற்கு , தலா ஆயிரம் ரூபாய் மற்றும் இரவு உணவு கொடுத்து ஏராளமானோரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு, எடப்பாடி பழனிச்சாமி பெயர் சொல்லப்படும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்யவேண்டுமென உத்தரவு.

இதன்மூலம் பணத்தைக் கொட்டி அதிமுகவைக் கைப்பற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிடுவது தெரிகிறது என்றும் இவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டுமென்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response