தடயங்களை அழிக்கவே வன்முறை – கள்ளக்குறிச்சி சிக்கலில் அதிரவைக்கும் புதியதகவல்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் காரணமாக நேற்று பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதை மெய்ப்பிக்கும் விதமாக பல கருத்துகள் வெளியாகின்றன, அவற்றில் ஒன்று….

முக்கிய குற்றவாளிகள்ல முதல் குற்றவாளியே அந்த பள்ளி தாளாளர்
பள்ளி நிறுவனருக்கு ஆதரவாகத் திட்டமிடப்பட்டு கலவரகாரர்களால் எரிக்கப்பட்ட தடயங்கள்.
1 . கேட் வாசலில் வைத்து இருக்கும் வருகைப் பதிவேடு மறறும் காவலாளி அறை.
2. மாணவி கொல்லபட்ட நேரத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள்.
3. குறிவைத்து எரிக்கப்பட்ட பஸ்கள். ( சம்பவம் நடைபெற்ற அன்று மருத்துவமனைக்கு மாணவியின் உடல் பள்ளி பஸ் முலமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று சேர்த்தனர் என்று கூறுகின்றனர் அது உண்மை என்றால் அந்த பஸ்ஸில் ஏதோ தடயம் இருந்து இருக்கின்றது அதைத் தான் கலவரக்காரர்கள் கொளுத்தியிருக்கின்றனர்)
4. பள்ளியின் திருட்டுத்தனத்துக்கு ஆதாரமாக இருக்கும் சில தஸ்தாவேஜ்கள்.
மேற்கூறிய தடயங்களை 3 நாட்களாக நிதானமாக அலசி ஆராய்ந்து திட்டமிடப்பட்ட்டு உருவான கலவரத்தின் மூலம் நின்று நிதானமாக ஆற அமர தடயங்களை அழித்திருக்கிறார்கள். இதற்கு அங்குள்ள சில போலிஸ் உயர் அதிகாரிகளும் உதவி இருக்கின்றனர்.
ஏற்கனவே அந்த பள்ளியில் தான் ஆர் எஸ் எஸ் சாகா பயிற்சி பல வருடங்களாக நடந்தேறி வருகிறது. பள்ளியின் நிறுவனர் ஆர் எஸ் எஸ்சின் மிகப்பெரிய புள்ளியாக செயல்பட்டு வருகிறார்.
ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் பள்ளியின் நிர்வாகியைக் காப்பாற்றும் நோக்கிலேயே இந்தக் கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
நியாயமாகப் போராடிய மாணவியின் பெற்றோருக்கு நீதி கிடைக்காமல் இருக்கவே சமூகவிரோதிகள் கைங்கரியத்தால் போராட்டம் வன்முறைப் பாதைக்கு அழைத்துசெல்லப்பட்டு இருக்கின்றது.

என்கிற கருத்தைப் பலர் பதிவு செய்திருகின்றனர்.

இதற்கேற்ப, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு 3 நாட்களாகப் போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஒரு மாணவியின் மரணத்தைக் கூட அரசியலாக்கி, தன் உள்கட்சி மோதலைத் திசைதிருப்ப அவர் இப்படி கூறியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீமதி மரணத்தைப் பொறுத்தவரை, அந்த சம்பவம் வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டிருந்தது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வந்த வேளையில், பெற்றோர் தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு விசாரணை நாளை (இன்று) நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி, மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்து விட்டு, எந்த பதவியில் நாம் இருக்கிறோம்? என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், யாருக்கும் வேண்டாம்.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார்? என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டி விட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்பதோடு, மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நடைபெறும் சி.பி.சி.ஐ.டி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமைதியாக நடந்த போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது என்கிற அமைச்சரின் இந்தக் கருத்தும் தடயங்களை அழிக்கவே வன்முறை நடந்துள்ளது என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமையாளரான ரவிக்குமார், மாவட்ட பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவில் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் இருமுறை ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சிக்கு இடமளித்து உதவியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

Leave a Response