நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடத்தும் கோடை கொண்டாட்டம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) ஃபோக்ஸ் வேர்ல்டு (M/s Folks World) என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் ஜூன் 2 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.௦௦ மணியளவில் தொடங்கி வைத்தார்கள்.

இந்தப் பொருட்காட்சியில்,

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும் வகையில் “சென்னையில் குற்றால அருவி”

கோடை விடுமுறையைக் குளிர்ச்சியாக்க பனிக்கட்டி உலகம்

குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ராட்டினம், டோரா டோரா, பீகாக் வாட்டர் ரோலர், டெக்னோ ஜம்ப் (Giant Wheel, Tora Tora, Peacock, Watter Roller, Techno Jump)
போன்ற 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம்

3டி தியேட்டர், கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் காட்சி, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, மேஜிக் ஷோ போன்ற பல்வேறு ஸ்பெஷல் ஷோ

குழந்தைகளைக் குதுகலப்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களுடன் ரியாலிட்டி ஷோ (Augmented Reality Show)

வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி
மகிழ 50க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்

டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம்ஸ் மற்றும் பிரியாணி போன்ற உணவு அரங்குகள்

ஏசி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டி.வி., போன்ற இதர வீட்டு உபயோகப்பொருட்கள் (Home Appliances) அனைத்தையும் சலுகை விலையில் வாங்கிட வசந்த் & கோ அரங்கம்

மகளிர் மனம் மகிழ சமையலுக்குத் தேவையான அனைத்து மசாலாக்கள் வாங்கிட ஏதுவாக ஆச்சி மசாலா (Aachi Masala) அரங்கு

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி.

இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்காட்சியின் (வரிகள் உட்பட) நுழைவுக் கட்டணம் ரூபாய் ரூ.60/- அறுபது மட்டும்)

பொருட்காட்சி நேரம் -திங்கள் முதல் சனிக்கிழமை வரை:
|மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
|ஞாயிற்று கிழமைகளில் 😐 காலை 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

இந்தக் கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியானது ஜூன் 2 முதல் முதல் 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ரெடின்கிங்ஸ்லி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஏன்? என்றால், இந்தப் பொருட்காட்சியை நடத்தும் ஃபோக்ஸ் வேர்ல்டு நிறுவனம் அவருடையது என்கிறார்கள். அவர்தான் இந்தப் பொருட்காட்சியைப் பல ஆண்டுகளாக நடத்திவருகிறாராம்.

Leave a Response